இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தெரிவித்தது
Share
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட் டமைப்பு தெரிவித்தது. உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 93 சதவீதத்தை ரஷியாவும், அமெரிக்காவும் கொண் டுள்ளன. அணு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள பிற நாடுகள் மிக குறைந்த அளவிலான ஆயுத கையிருப்பையே கொண்டுள்ளன. அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகள் சுமார் 4 ஆயிரத்து 150 அணு ஆயுதங்களை வைத்துள்ளன. 1998-ம் ஆண்டில் நடைபெற்ற பொக்ரான்-2 அணு ஆயுத சோதனைகளுக்கு பிறகு, முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அணு ஆயுதங்கள் வைத்துள்ள 9 நாடுகளும் தங்கள் அணு ஆயுத இருப்பை விரிவுபடுத்துவதோடு, ஏவுகணை மூலம் அவற்றை ஏவும் திறன்களையும் மேம்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு இந்தியாவின் அணு ஆயுதங்கள் என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது: சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா தனது அணு ஆயுத களஞ்சியத்தை தொடர்ந்து நவீனமயமாக்கி வருகிறது. இதற்காக சமீபத்திய ஆண்டுகளில் பல புதிய ஆயுத அமைப்புகள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்தியாவிடம் சுமார் 190 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில், உற்பத்தியில் உள்ள புதிய ஏவுகணைகளுக்கான 30 கூடுதல் ஆயுதங்களும் அடங்கும். இந்த மதிப்பீடு பொது தகவல்கள், அரசு வழங்கும் தரவுகள் மற்றும் வணிக செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. தற்போதுள்ள அணு ஆயுதத்திறன் கொண்ட விமானங்கள், தரைவழி, கடல்வழி ஏவுதள அமைப்புகளுக்கு மாற்றாகவோ அல்லது அவற்றுடன் இணைந்தோ செயல்படக்கூடிய பல அமைப்புகள் உருவாக்கத்தில் உள்ளன. மேலும் பல ஆயுத அமைப்புகள் உருவாக்கத்தில் இருப்பதால், இந்தியாவின் ஆயுத கையிருப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிளவுபடக்கூடிய பொருட்கள் குறித்த அணுசக்தி, ஆயுத கட்டுப்பாடு மற்றும் பரவல் தடுப்பு நிபுணர்களை கொண்ட ஒரு குழு இந்தியா சுமார் 730 கிலோ ஆயுத தரத்திலான புளூட்டோனியத்தை உற்பத்தி செய்துள்ளதாக மதிப்பிட்டு உள்ளது. ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 4 கிலோ புளூட்டோனியம் தேவை. தற்போது இந்தியாவிடம் இருக்கும் புளூட்டோனியத்தால் 140 முதல் 225 வரையிலான அணு ஆயுத முனைகளை தயாரிக்க முடியும். அணு ஆயுத முனை வடிவமைப்புகள் எதுவாக இருந்தாலும், இந்தியா தனது முழு புளூட்டோனியத்தையும் ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. அது ஒரு பகுதியை இருப்பு வைத்திருக்கலாம். இந்தியாவின் அணு ஆயுத இருப்பின் அளவானது. அவற்றை ஏந்திச்சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுதளங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளையும் பொறுத்தே அமைகிறது.















