LOADING

Type to search

உலக அரசியல்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூட்டான் சென்றுள்ளார்

Share

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூட்டான் சென்றுள்ளார். இந்தியாவின் அண்டை நாடு பூட்டான். இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக பூட்டான் சென்றுள்ளார். 2 நாட்கள் பயணமாக ஜெய்சங்கர் தனி விமானம் மூலம் பூட்டான் தலைநகர் திம்பு சென்றார். அங்கு அவரை பூட்டான் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த பயணத்தின்போது பூட்டான் மன்னர் ஜிக்மி கேசர் நம்யல் வங்ஷிக், அந்நாட்டு பிரதமர் டிஷெரிங் டொப்கெ, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லியோன்பா தங்யல் ஆகியோரை ஜெய்சங்கர் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.