LOADING

Type to search

உலக அரசியல்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது

Share

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 51 பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, உலகிலேயே நிலநடுக்கங்களும், எரிமலை வெடிப்புகளும் அதிகம் நிகழும் ஆபத்தான நாடாக கருதப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இங்கு ஏற்பட்ட சுனாமி, உலகையே உலுக்கிய சோகம் இன்றும் மக்கள் மனதில் ஆறா வடுவாக உள்ளது. இந்நிலையில், அங்கு மற்றொரு பெரும் இயற்கைப் பேரிடர் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் கடல் பகுதியில், உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து தரைமட்டமாயின. தூக்கத்தில் இருந்த மக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். சிக்கா, மங்கராய் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிந்தும், நிலச்சரிவில் சிக்கியும் இதுவரை 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுவதால் இந்தோனேசியாவில் பெரும் சோகம் நிலவுகிறது.