09.10.2026 வெள்ளி தொடக்கம் 15.10.2026 வியாழன் வரையும்
Share

ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர்
ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204.
தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666
மேஷம் ராசி:
அன்பர்களே! வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது. வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்களும் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். அவசர முடிவுகளைத் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண்: 1, 9. அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், ஞாயிறு. இந்த வாரம் மேஷத்திற்கு 9/10 மதிப்பெண்.
ரிஷப ராசி
அன்பர்களே! தேவையான அளவுக்குப் பணம் இருப்பதால் இந்த வாரம் செலவுகளை சமாளிப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. செலவுகளும் சுபச்செலவுகளாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. தந்தைவழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், அவர்களுடன் பேசும்போது சற்று எச்சரிக்கையாக இருக்கவும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சற்று இழுபறியான நிலையே காணப்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். முக்கியமான ஒரு பிரச்னையை சமயோசிதமாகத் தீர்த்து நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரம்தான். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் இருப்பதால் பிரச்னை எதுவும் ஏற்படாது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும். செலவுகளை திட்டமிட்டு கட்டுப்படுத்தினால் இந்த வாரம் பல நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 2, 6. அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, புதன். இந்த வாரம் ரிஷபத்திற்கு 8.5/10 மதிப்பெண்.
மிதுனராசி
அன்பர்களே! பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். ஆனால், கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். அதிக அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம். போதுமான ஓய்வும் தூக்கமும் அவசியம். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு போட்டித் தேர்வுகளில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5, 9. அதிர்ஷ்ட நாள்: புதன், ஞாயிறு. இந்த வாரம் மிதுனத்திற்கு 9/10 மதிப்பெண்.
கடகராசி
அன்பர்களே! எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ்
பெற்ற புனிதத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும். சக ஊழியர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட
லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும்.
அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும். காதல் உறவுகளில் இருந்த சிறிய மனவருத்தங்கள் நீங்கி உறவு இனிமையாக மாறும். உடல்நலத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்பச்சை. அதிர்ஷ்ட எண்: 2, 7. அதிர்ஷ்ட நாள்: திங்கள், வியாழன். இந்த வாரம் கடகத்திற்கு 8.5/10 மதிப்பெண்.
சிம்மராசி
அன்பர்களே! குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகளில் யோசித்து இறங்குவது நல்லது. உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து அந்நியோன்யம் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் அதனால் பாதிப்பு இருக்காது. வெளியூர்ப் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்கவும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். அதிக வேலைப்பளுவால் உடல் சோர்வு ஏற்படலாம். போதுமான ஓய்வும் உடற்பயிற்சியும் அவசியம். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தற்பெருமையைத் தவிர்த்து அனைவருடனும் இணக்கமாக நடந்துகொண்டால் இந்த வாரம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: தங்க மஞ்சள், ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண்: 1, 3. அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு, செவ்வாய். இந்த வாரம் சிம்மத்திற்கு 9/10 மதிப்பெண்.
கன்னிராசி
அன்பர்களே! பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம் தேவை
யற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். நீண்ட
நாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு பணிநிமித்தமான பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். உடல்நலத்தில் செரிமானம் தொடர்பான சிறிய பிரச்சினைகள் அல்லது உடல் சோர்வு ஏற்படலாம்; உணவு முறையிலும் ஓய்விலும் கவனம் செலுத்துங்கள். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுத்தால் வெற்றி உறுதி.
இந்த வாரம் பச்சை நிறம் அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்: 5. அதிர்ஷ்ட நாட்கள்: புதன், வெள்ளி. இந்த வார மதிப்பெண்: 88/100.
துலாராசி
அன்பர்களே! வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வாரப் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்த னைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் ஈடுபட்டால் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உடல்நலத்தில் சிறிய சோர்வு அல்லது தலைவலி ஏற்படலாம்; போதிய ஓய்வு அவசியம். முதலீடு செய்வதற்கு முன் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
இந்த வாரம் வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்: 6. அதிர்ஷ்ட நாட்கள்: வெள்ளி, சனி. இந்த வார மதிப்பெண்: 85/100.
விருச்சிகராசி
அன்பர்களே! வார முற்பகுதியில் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் கௌரவம் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சற்று இழுபறியான நிலையே காணப்படும் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகளும் கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உடல்நலத்தில் பழைய பிரச்சினைகள் குறைந்து புத்துணர்ச்சி ஏற்படும். முக்கியமான முடிவுகளை நிதானமாக எடுத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
இந்த வாரம் அடர் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்: 9. அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், ஞாயிறு. இந்த வார மதிப்பெண்: 87/100.
தனுசுராசி
அன்பர்களே! வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உடனே சரியாகி விடும். குடும்பம் தொடர்பான. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக் கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உடல்நலத்தில் சிறிய சோர்வு அல்லது தூக்கமின்மை ஏற்படலாம்; போதிய ஓய்வு அவசியம். பயணங்கள் சாதகமான பலன்களைத் தரும்.
இந்த வாரம் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்: 3. அதிர்ஷ்ட நாட்கள்: வியாழன், ஞாயிறு. இந்த வார மதிப்பெண்: 89/100.
மகரராசி
அன்பர்களே! பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண
வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு திடீர்ப் பயணங்களும் அதனால் ஆதாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்குமான சந்தர்ப்பம் கனிந்து வரும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உடல்நலத்தில் மூட்டு வலி அல்லது உடல் சோர்வு இருந்தால் அலட்சியம் செய்யாமல் கவனித்துக் கொள்ளுங்கள். புதிய முதலீடுகளை நிதானமாக ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது.
இந்த வாரம் நீல நிறம் அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்: 8. அதிர்ஷ்ட நாட்கள்: சனி, புதன். இந்த வார மதிப்பெண்: 88/100.
கும்பராசி
அன்பர்களே! பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதியும் மனச்சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும். வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். உடல்நலத்தில் சிறிய சோர்வு அல்லது தூக்கமின்மை ஏற்படலாம்; ஓய்விற்கு முக்கியத்துவம் கொடுங்கள். புதிய முயற்சிகளை தன்னம்பிக்கையுடன் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
இந்த வாரம் இளநீல நிறம் அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்: 4. அதிர்ஷ்ட நாட்கள்: சனி, புதன். இந்த வார மதிப்பெண்: 89/100.
மீனராசி
அன்பர்களே! பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கி டையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்
உடல்நலத்தில் சிறிய அலர்ஜி அல்லது சளி தொடர்பான பிரச்சினைகள் தோன்றலாம்; உணவு மற்றும் ஓய்வில் கவனம் செலுத்துங்கள். முக்கியமான முடிவுகளை நம்பிக்கையுடன் எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த வாரம் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்ட எண்: 7. அதிர்ஷ்ட நாட்கள்: வியாழன், வெள்ளி. இந்த வார மதிப்பெண்: 90/100.
















