LOADING

Type to search

சினிமா

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் சகோதரர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்

Share

 இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் சகோதரர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.  திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 64’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் இன்னும் முடிவாகாததால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவரது சகோதரர் மனு ரவிச்சந்திரன் சினிமாவில் அறிமுகமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ‘ரேனிகுண்டா 2’ படத்தில் இசையமைப்பாளராக அவர் அறிமுகமாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ‘ரேனிகுண்டா 2’ படத்தின் முன்னோட்டம் வெளியான நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இதனை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சகோதரருடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “இது ஒரு அழகான மற்றும் வித்தியாசமான உணர்வு. என்னுடைய சகோதரருக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ரேனிகுண்டா 2 இயக்குநர் பன்னீர் செல்வத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். பன்னீர் செல்வம் இயக்கத்தில் ‘ரேனிகுண்டா 2’ படத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இசையில் உருவாகும் இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் யுகபாரதி மற்றும் விவேகா ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை தீப்ஷிகா அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘ஏ பன்னீர் செல்வம் பிலிம் பேக்ட்ரி’ மற்றும் ‘கிங்ஸ் ஸ்டுடியோஸ்’ தயாரித்துள்ளது.