இயக்குனர் திரு அடுத்ததாக சண்முக பாண்டியனை வைத்து படம் இயக்க இருக்கிறார்
Share
இயக்குனர் திரு அடுத்ததாக சண்முக பாண்டியனை வைத்து படம் இயக்க இருக்கிறார். தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சமர் ஆகிய ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் திரு. கடந்த 2008ம் ஆண்டு சத்யம் திரைப்படத்திற்காக இயக்குனர் ஏ.ராஜசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர், 2010ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மூலம் திரு இயக்குனராக அறிமுகமானார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் திரையரங்க வசூல் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2013ம் ஆண்டு மீண்டும் விஷாலுடன் சேர்ந்து சமர், 2014ம் ஆண்டு நான் சிகப்பு மனிதன் ஆகிய இரண்டு படங்களை இயக்கினர். தொடர்ந்து 2018ம் ஆண்டு திரு.சந்திரமவுலி, 2019ம் ஆண்டு சாணக்யா ஆகிய படங்களையும் இயக்கினார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் திரு மீண்டும் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் திரு அடுத்ததாக சண்முக பாண்டியனை வைத்து படம் இயக்க இருக்கிறார்.
















