LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் மீது ரஷியா டிரோன், ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்

Share

உக்ரைன் மீது ரஷியா டிரோன், ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,599வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் துறைமுக நகரங்களான ஒடிசா, மைகொல்வியா ஆகிய நகரங்களில் உள்ள துறைமுக உள்கட்டமைப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கருங்கடலில் ரஷிய கப்பல்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.