LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்

Share

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதேவேளை, பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சப்போரியா மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த குண்டு வீச்சு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.