‘ஊழல்’ ரணில் காலத்தில் யாழ்ப்பாணத்தில் அனுமதி மறுக்கப்பட்ட 4 மதுபானசாலைகளுக்கு ‘அநுரா’ அரசு அனுமதி வழங்கி சீரழிவிற்கான ‘கதவு ‘ திறக்கட்டுள்ளது.
Share
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 4 புதிய மதுபானசாலைகளின் அனுமதிக்கான கட்டணம் பிரதேச செயலகங்களில் சில நாட்களுக்கு முன்னர் செலுத்தப்பட்டுள்ள தவல்கள் வெளியாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டு’ஊழல்’ ஜனாதிபதி ரணிலின் ஆட்சியில் பல தமிழ் பேசும் அரசியல்வாதிகளின் சிபார்சின் பெயரில் நூற்றிற்கும. மேற்பட்ட மதுபானசாலை புதிய அனுமதிகள் அள்ளி வழங்கப்பட்டன.
அவ்வாறு வழங்கப்பட்ட அனுமதிகள் ஏற்கனவே மதுபான விற்பனை அனுபவம்கொண்டவர்களிற்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதிகளில் கை மாறின கை மாறிய அனுமதிப் பத்திரங்களைப் பெற்றவர்கள் புதிய மதுபானசாலைகளை ஆரம்பிக்க முற்பட்டபோது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 இடங்களில் மக்களின் அதிக எதிர்ப்பு காரணமாக அதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்க பிரதேச செயலகங்கள் மறுத்து விட்டன. மறுக்கப்பட்ட மதுபானசாலை உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மதுபானசாலை உரிமையாளர்கள் சார்பில் தீர்ப்பு கிட்டியதனால் தீர்ப்பின் அடிப்படையில் அந்த அனுமதிகளை வழங்குமாறு கோரி அதற்கான பணத்தை செலுத்த தினம் பிரதேச செயலகங்களை நாடினர்.
இதில் சங்கானை, உடுவில், தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு பிரிவு தவிர்ந்த ஏனைய 3 செயலகங்களில் ஒரே நாளில் தினம் பணம் செலுத்தப்பட்டுள்ளது. 4 வது செயலகத்தில் செலுத்தப்படலாம் எனத் தெரிய வருகின்றது.
மதுபானசாலைகளிற்கு எதிராக குரல்கொடுப்போம் இது ஊழல் மோசடியாக வழங்கப்பட்ட மதுபானசாலைகள் என அநுரா அரசு பதவியேற்ற காலம் முதல் என்.பி.பி அரசு கூறிவந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தற்போது சுரேஸ் பிரேமசந்திரன் போன்ற பதவிகள் எதுவும் இல்லாத தமிழ் பேசும் அரசியல் வாதிகளும் இந்த மதுபானசாலை அனுமதி என்னும் புதிய ‘வியாபாரத்தின்’ பங்காளிகள் என்றும் முன்னைய ஆட்சி காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் அந்த அரசியல் வாதிகள் அரச அனுமதியைப் பெற்று அதனை பண முதலைகளுக்கு விற்பனை செய்தார்கள் என்ற விடயம் அனைவருக்கும் தெரிந்த விடயமாக இருந்தாலும் தற்போது; மீண்டும் ஏதாவது ஒரு அரசியல் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என்ற ‘அவா’ வுடன் அவர்கள் அழையா விருந்தாளிகளாக ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு வருவதாகவும் அறியப்படுகின்றது. அத்துடன் சுமந்திரன் மற்றும் சிவிகே. சிவஞானம் ஆகியோருடன் கைகோர்த்து நின்று ஏதாவது பதவிகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற நப்பாசையோடு காத்திருப்பதாகவும் அறியப்படுகின்றது















