LOADING

Type to search

சினிமா

“எக்ஸாம்” தொடர் மே.15 முதல் பிரைம் காணொளி தளத்தில் வெளியீடு

Share

இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் காணொளி தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘எக்ஸாம்  இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.  வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம் இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏழு அத்தியாயங்களாக இத்தொடர் தயாராகியிருக்கிறது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி – இயக்குநர் ஏ. சற்குணம் – துஷாரா விஜயன் – அதிதி பாலன் – ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், ” நாங்கள் ‘வா குவாட்டர் கட்டிங் ‘எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான ‘களவாணி’ திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார்.‌ இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, ‘பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்’ என எடுத்துச் சொன்னோம் சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம்.‌ ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும்.‌ ‘எக்ஸாம்’ தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம்  … ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.‌ சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது.‌ கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான்.  ‘வதந்தி’ தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்-ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும். நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார். நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான்  என்று  சொன்னார்.இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும்.‌ அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார்.  அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். ” என்றார்.