“என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்” நடிகை கலைமாமணி சுஜாதாவின் சினிமா பங்களிப்புப் பற்றிய ஓர் மெய்யியற் பார்வை
Share
கலைமாமணி நடிகை சுஜாதா (டிசம்பர் 10, 1952 முதல் ஏப்ரல் 06, 2011 வரை ) இந்திய திரைப்பட உலகில் குறிப்பாக தமிழ் திரைப்பட உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படஙகளில் நடித்த ஒரு குணசித்திர, உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்த தலைசிறந்த நடிகையாக திகழ்ந்தவர். அவரது இந்திய திரைப்படக்கலைக்கான பங்களிப்பை ஓர் கலா இரசனையியல் அழகியல் மெய்யியல் மாணவ என்ற [as a student of Philosophy of Art and Aesthetics] வகையில் ஆய்வு செய்து, அவரது நடிப்பு திறமைகளையும், அத்தோடு அவரது சொந்தத் தனிப்ட்ட வாழ்க்கைத் துயரங்களையும், வாசகர்களோடு பகிர்ந்துக் கொள்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். எனக்கு ஏன் இத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டதென்றால், 1978இல் நான் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியலைச் சிறப்புக் கலைமாணிப் பட்டப்படிப்பு படிக்கும் போது எனது B.A. (Hons.) இறுதியாண்டு ஆய்வுக் கட்டுரையாக கலா இரசனையியல் மெய்யியலில் “அழகுணர்ச்சி பற்றிய மெய்யியற் பிரச்சினைகள்” என்பதில் ஆய்வு செய்திருந்தேன். (Specializing what is Aesthetics feelings/experience).
இச்சிறிய விளக்கத்தோடு முதலில் கலைமாமணி நடிகை சுஜாதாவின் நடிப்பு திறமைகளையும் அவரது சோகம் நிறைந்த தனிப்பட்ட வாழ்வைப் பற்றியும், குறிப்பாக தமிழ் திரைப்பட சினிமாக்கலைக்கான பங்களிப்புப் பற்றி ஆராயும் முன், ஒரு கலா இரசனையியல் அழகியல் மெய்யியல் மாணவன் என்ற வகையில் இங்கே கலா இரசனையில் அல்லது அழகியியல் மெய்யியல் என்றாலென்ன? என்பதை இக்கட்டுரைக்குப் பொருத்தமான முறையில் சுருக்கமாகப் பார்ப்போம்.
மெய்யியல் நான்கு பெரும் அடிப்படைத் தூண்களில் கட்டியெழுப்பப்ட்டதென்று பொதுவாக மெய்யியலாளர்கள் கூறுவர். அவையாவன:
1. அறிவாராய்ச்சியியல் (Epistemology / Theory of Knowledge)
2. அளவையியல் (Logic)
3. கலா இரசனையியல் அல்லது அழகியல் மெய்யியல் (Philosophy of Art and Aesthetics)
4. ஒழுக்க மெய்யியல் (Philosophy of Ethics)
ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டபடி இங்கே கலா இரசனையியல் மெய்யியல் அல்லது அழகியல் என்றொலென்ன? என்பதைப் பற்றி மிக மிகச் சுருக்கமாக்ப் பின்வரும் பத்திகளில் பார்ப்போம்! ஏனெனில், இத்துறை பற்றிய இவ்வடிப்படை விளக்கம் கலைமாமணி சுஜாதாவின் இந்திய சினிமாக்கலைக்கான பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் அவரது உணர்வு பூர்வமான குணச்சித்திர நடிப்பாற்றலின் சிறப்பையும் புரிவதற்கு இவ்வடிப்படை விளக்கம் உதவுமென நான் நினைக்கின்றேன்.

சுருங்கக்கூறின், மனிதர் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளும் போது தத்தமது கருத்துக்களையும், எண்ணங்களையும், சிந்தனைகளையும் பரிமாறிக் கொள்வதற்கும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்வதற்கும், ஒருவருடைய மொழி எந்தளவுக்கு ஊடகமாக அமைகின்றதோ அதேபோல மனிதர்களுக்கு இடையேயுள்ள பொது உணர்ச்சிகளான அன்பு, பாசம், காதல், வீரம், சோகம், கவலை, துக்கம், கோபம், நகைச்சுவை, பொறுமை போன்ற பொதுவான உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகமாக சினிமா, கலை, கவிதை, இலக்கியம், நாடகம், நாட்டியம், சிற்பம், ஓவியம் போன்ற கலைகளின் படைப்புகள்ள அல்லது கலை ஆக்கங்கள் (Work of Arts) அமைகின்றதென கலா இரசனையியல் மெய்யியலாளர்கள் கூறுவர். இதனால் தான் மனித உணர்ச்சிகளின் குறியீடுகளான உருவங்களைப் படைப்பதே சினிமாக்கலை என்கிறார் அழகியல் மெய்யியலாளரான திருமதி. எஸ். லாங்கர் (Mrs. S. Langer).
சினிமாக் கலைன் (இயக்குநர்கள், நடிகர்கள்) தாம் உணர்ந்த உணர்ச்சியை அல்லது உணர்வு அனுபவங்களை அப்படத்தை பார்க்கும் ரசிகர்களும் அவர்களது அப்படைப்பின் மூலம் Work of Art, அதாவது அக்கலை ஆக்கத்தின் மூலம் அக்கலை ஆக்கம் அதாவது அச்சினிமாப் படம் யார் யாரைச் சென்றடைகின்றதோ அவர்களையும் அக்கலை ஆக்கத்தின் மூலம் உணரச் செய்தால் அதுவே உண்மைச் சினிமாக்கலையாகும். பொதுவாக கலை என்பதன் வரைவிலக்கணம் (Definition) என்னவென்றால் கலைஞன் தான் அனுபவித்த உணர்ச்சிகளை சில வெளிக்குறிப்புக்கள் மூலம் அதாவது தத்தமது (Work of Arts) அக்கலையாக்கத்தின் மூலம் பிறருக்கு இங்கே சினிமாக்கலையககத்தின் மூலம் வெளிப்படுத்தி அவர்களிடம் அதாவது அப்படத்தை பார்க்கின்ற சினிமா ரசிகர்களிம் அந்த உணர்ச்சிகளை, அனுபவங்களை அதாவது சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை அல்லது உணர்ச்சிகளைத் தொற்றிக் கொள்ளச் செய்தால், அதாவது தாம் கற்பனையிலோ அல்லது நிஜ வாழ்க்கையிலோ அனுபவித்த அவ்வுணர்ச்சிகளைப் பரவச் செய்து அவர்களும் அப்படத்தி (கலை ஆக்கத்தின்) மூலம் அக்கலைஞனைப் போலவோ நடிகனைப் போலவோ அனுபவிக்கச் செய்தால் அல்லது அவ்வுணர்வுகளைத் தொற்றச் செய்தால் அதுவே ண்மைச் சினிமா கலையாகும். இந்த வகையில் தமிழ் திரைப்பட உலகில் இயக்குநர் கே. பாலச்சந்தர் ஒரு சிகரமாக அமைந்தார். தமிழ் திரைப்பட உலகில் தலைச்சிறந்தவராக காணப்பட்டார். அவரால் அடையாளங் காணப்பட்டு (identified) தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவரே கலைமாமணி நடிகை சுஜாதாவாகும். இவ்வாறே தமிழ் திரைப்பட உலகில் பல சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை ஏற்படுத்த இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் பல பொருத்தமான நடிகர்களை தனது படங்களுக்கு தனது படங்களுக்கு தேர்ந்தெடுப்பதில் வல்லவராகத் திகழ்த்ர். அந்த வகையில் மலையாளத்திரைப்பட உலகில் இருந்து தமிழ்த்திரைப்பட உலகிற்கு சுஜாதாவை அறிமுகப்படுத்தி பல வெள்ளி விழாப் பங்களை தயாரித்தார். அவரது தெளிவான கலைமாமணி சுஜாதா தமிழ் திரைப்பட உலகில் சிறந்தவராகக் காணப்பட்டார். இப்பின்னணி விளக்கத்தோடு கலைமாமணி சுஜாதாவைப் பற்றியும், அவரது தமிழ் திரைப்பட கலைக்கான பங்களிப்பையும் சற்று விபரமாகப் பார்ப்போம்.
சுஜாதாவின் ஆரம்ப கால வாழ்வும், அவரது இலங்கைத் தொடர்பும்
1940களிலும் 1950 களிலும் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களை கற்பிக்க பல இந்திய ஆசிரியர்கள் இலங்கைக்கு வந்திருந்தனர். அந்த வகையில் சுஜாதாவின் தகப்பனாரும் விலங்கியல் பாடம் கற்பிப்பதற்காக யாழ்/தெல்லிப்பழை மகாஜானக்கல்லூரிக்கு வந்தாரெனவும், அவரது பெயர் திரு. மேனன் என்றும் அவர் அண்மையில் கனடாவில் காலஞ்சென்ற முன்னாள் மகாஜனக் கல்லூரி அதிபர் பொன்னையா கனகசபாபதியின் சமகாலத்தவர் என்றும் அதாவது மகாஜனக்கல்லூரியில் ஒன்றாகப் படிப்பித்தவரென்றும் அறியப்படுகின்றது. இக்காலப் பகுதியில் அதாவது டிசம்பர்10, 1952இல் தெல்லிப்பழையில் சுஜாதா பிறந்தாரென்றும் அறியப்படுகிறது. அத்தோடு அவர் தனது ஆரம்பப் பள்ளி படிப்பை தெல்லிப்பழையில் ஆரம்பித்தாரெனவும் நாம் பெருமையோடு கூறிக் கொள்ளலாம். பின்பு தனது பத்தாவது வயதில் அவரது தகப்பனார் திரு. மேனன் காலியிலுள்ள ஒரு கல்லூரிக்குப் படிப்பிக்க மாற்றலாகிச் சென்றாரெனவும் அறியப்படுகின்றது. தகப்பனாரோடும், தனது குடும்பத்தினரோடும் காலிக்குச் சென்ற சுஜாதா தனது பள்ளிப் படிப்பை சிங்கள மொழி மூலம் பயின்றாரெனவும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் தெரிந்த சுஜாதா தமிழை மறந்து சிங்களத்தில் சரளமாக உரையாட வல்லவராகவும், சிங்கள மொழியில் பல நாடகங்களை நடித்தாரென்றும் அறியப்படுகிறது. காலியிலிருக்கும் போது ஒரு சிங்கள திரைப்பட இயக்குநர் அவரது தகப்பனாரை அணுகி சுஜாதாவை சிங்கள மொழித் திரைப்பட உலகிற்கு அறிமுகப்படுத்த எத்தானித்தாரெனவும், அச்சந்தர்ப்பத்தை சுஜாதாவின் தகப்பனார் மறுத்தாரெனவும் அறியப்படுகிறது. 1960 களில் அவரது தந்தையாரான திரு. மேனன் தனது படிப்பித்தல் தொழிலில் இருந்து ஓய்வு பெற்று கேரளாவிற்கே குடும்பத்தோடு சென்றாரெனவும் அறியப்படுகிறது சுஜாதாவும் அவரது குடும்பத்தோடு கேரளாவுக்குச் சென்று அடுத்து என்ன செய்வதென்று தடுமாறினார். அவரது தாயார் அவரை சினிமாத்துறைக்குச் செல்வதற்கு ஊக்கப்படுத்தினார். தகப்பனாரும் தனது கட்டுப்பாட்டைத் தளர்த்தி முதலில் மலையாளப்படங்களில் நடிக்க அனுமதித்தார்.
1967இல் “THABASWINI” என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தைப் பார்த்த தமிழ் திரைப்பட இயக்குநர் சிகர் கே. பாலச்சந்தர் இவரது நடிப்புத் திறமையை அடையாளங்கண்டு 1974இல் “அவள் ஒரு தொடர்கதை” என்னும் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகப்படுத்தினார். எடுத்த எடுப்பிலேயே அவரது முதல் தமிழ்ப்படமான “அவள் ஒரு தொடர்கதை” தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடிய படமாக திகழ்ந்து அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. இது பற்றி அவரது புகழ்ப் பற்ற சினிமாப் படங்களும், பரிசில்களும் என்னும் பகுதியில் சற்று விபரமாகப் பார்ப்போம்.
பல பாராட்டுக்களையும், கௌரவங்களையும், புகழையும், பரிசில்களையும் பெற்ற சினிமா நட்சத்திரமாக ஜொலித்த சுஜாதாவின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மிகவும் சோக மயமாகவே அமைந்திருந்தது. தனது சோகத்தை உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் மனம் திறந்து கூறியிருந்தாலும், நான் இக்கட்டுரையின் தலையங்கத்திலே கூறியருந்தபடி “என் மனம் என்னவென்று என்னையற்றி யாருக்குத் தெரியும்” என்கின்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப கணவன் ஜெயாகர் (Jayakar) இன் உள் வீட்டு கொடுமைகளுக்குட்பட்டு மன அழுத்தத்தினால் இருதய நோய்வாய்ப்பட்டு ஏப்ரல் 06, 2011 இல் சென்னையில் காலமானார். நல்ல ஒரு குணசித்திர நடிகையை தமிழ் திரையுலகு இழந்தது. அவருக்கு திவ்யா என்னும் டாக்டர் மகளும், சஜித் என்னும் மகனும் உள்ளனர். கணவர் ஜெயகரும் உயிருடன் இருப்பதாக அறியப்படுகின்றது.
சுஜாதாவின் புகழ் பெற்ற சில சினிமாப்படங்களும் அவர் பெற்ற பரிசில்களும் கௌரவங்களும்
நடிகை கலைமாமணி சுஜாதா ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட பிரதான இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் 1960, 1970, 1980களில் புகழ்ப்பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். அவற்றில் தமிழில் மட்டும் 200 சினிமாப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புத் திறமையைப் பற்றி இவரை தமிழ்ச்சினிமாவுக்கு “அவள் ஒரு தொடர்கதை” படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் மகளான புஸ்பா கந்தசாமி, சுஜாதா இறந்த போது ஹிந்து பத்திரிகைக்குப் பின்வருமாறு பேட்டியளித்திருந்தார். K. Balachander’s daughter Pushpa Kandasamy says, a film producer told the Hindu News Paper, “My father thought of her as a director’s delight, she would understand what exactly the director wanted, internalize the character and perform accordingly” அதாவது ஒரு திரைப்பட இயக்குநர் தன்னுடைய படக் கதாபாத்திரம் அப்படத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்று கூறுகின்ற சம்பாஷனைகளை அப்படியே உள்வாங்கி அப்பட இயக்குநரின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக தன்னுடைய நடிப்புத் திறமையைக் காட்டுவதில் மிக வல்லவராகவும், திறமையுள்ளவராகவும் திகழ்ந்தாரென்று குறிப்பிட்டார். அத்தோடு நடிகை சுஜாதா புகழ் பெற்ற பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான உலக நாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் போன்றோரோடும் தெலுங்கு நடிகர்களான என்.டி.ஆர்., நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, கிருஷ்ணன் போன்றோராரும் நடித்தார்.
எம்.ஜி.ஆர். தவிர எல்லா பிரபல தென்னிந்திய நட்சத்திர நடிகர்களோடும் நடித்துள்ளார். நடிகை சுஜாதா சினிமாக்கலைத்துறையில் பின்வரும் படங்களுக்கான சிறந்த நடிகைக்கான பரிசில்களையும், பாராட்டுக்களையும், கௌவரங்களையும் பெற்றார். அவையாவன:
1. 1975இல் சிறந்த தமிழ் நடிகைக்கான பரிசை “உறவு சொல்ல ஒருவன்” என்ற திரைப்படத்தில் நடித்துப் பெற்றார்.
2. 1976 இல் மீண்டும் சிறந்த தமிழ் நடிகைக்கான பரிசை “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலம் பெற்றுக் கொண்டார்.
3. 1977 இல் மீண்டும் சிறந்த தமிழ் நடிகைக்கான பரிசை தனது “அவர்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் பெற்றுக் கொண்டார்.
4. 1979 இல் சிறந்த தெலுங்குப்பட நடிகையாக தனது “Guppedu Manasu” என்ற தெலுஙகுப் படத்தில் நடித்ததின் மூலம் பெற்றுக் கொண்டார்.
5. 1981 இல் தலைசிறந்த தமிழ் நடிகைக்கான பரிசை “துணைவி” என்னும் தமிழ்ப்படத்தில் நடித்ததின் மூலம் பெற்றுக் கொண்டார்.
6. 1982 இல் “கலைமாமணி” என்னும் கௌரவத்தை தமிழ்நாடு அரசிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
7. 1997 இல் அகில இந்திய தலை சிறந்த நடிகருக்கான “நந்தி” (Nandi Award) ஐப் பெற்றார்.
சுருங்கக் கூறின், “In 1997 she got Nandu Award for best supporting role in the movie PELLI and also she was an award winning actress in all Indian languages. She performed and was conferred “Kalaimamani” by Tamil Nadu Government in 1982,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரால் தமிழிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட சுஜாதா “அவள் ஒரு தொடர்கதை” படத்தில் “கவிதா” என்னும் கதாபாத்திரத்தில் பெண்களை துஷ்பிரயோகம் செய்ய முற்படுபவருக்கு எதிரானவராகத் தோன்றி தனது அசத்தலான நடிப்பின் மூலம் பெண்ணிம் பேசுபவர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றவராகத் திகழ்ந்தார். அத்தோடு இப்படம் எல்லா பிரதான இந்திய மொழிகளான இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றில் எடுக்கப்பட்டபோது அதே “கவிதா” கதாபாத்திரத்தில் ஏற்று மிகச் சிறப்பாக நடித்து அம்மொழிகளிலும் சிறந்த பெண் நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டாரென்பது இங்கே சிறப்பாக குறிப்பிடத்தக்கதாகும். “Sujatha short to fame instantly with her horthayar of free thing urban working woman shouldering the family’s responsibilities Despite splaying her acting powers through fiery characters in Tamil Films like “Aval Oru Thodar Kadhai” and Vidhi. Sujatha was equally known for her performances in family dreams like “Mayangugiraal Oru Madhu” (அவள் வருவாள்). She seldom resorted to glamorous and graduated playing older women in the late 1980’s. இதற்கு உதாரணமாக ரஜினிகாந்தின் “பாபா” படத்தையும் 2006இல் அஜித்தோடு அவருக்குத் தாயாக நடித்த “வரலாறு” படத்தையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். இவற்றிலும் தாயாக வயதான அம்மாவாக நடித்துப் புகழ் பெற்றார்.
இங்கே சிறப்பாக குறிப்பிடத்தக்கதென்னவெனில் “விதி” என்ற படத்தில் பெண்களின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆதரவாக வாதிடும் டைகர் தயாநிதியாக வழக்கறிஞராக வரும் மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு எதிராக Women empowerment அதாவது பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்காக வாதிடும் போது, தானும் அத்தகைய துன்புறுத்தலுக்குள்ளானதை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வாதிடும் வழக்கறிஞராகத் தோன்றியது இன்றும் எல்லோரும் பாராட்டி அவரது பெண்ணுரிமைக்கு வாதிடும் நீதிமன்ற காட்சிகள் பாராட்டிப் போற்றப்பட்டு மக்கள் மனதில், குறிப்பாகப் பெண்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
இனி அவரது தனிப்பட்ட சோக வாழ்வைச் சித்தரிக்கும் கவியரசு கண்ணதாசனின் சில சினிமாப்பாடல்கள் ஊடாக அவரது வாழ்வைப் பார்ப்போம்.
“கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்!
என்மனம் என்னவென்று
என்னையற்றி யாருக்குத் தெரியும்?
நெருப்பெட்னறு சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான் கொண்ட நெருப்பு அணைகின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று என்னையற்றி
யாருக்குத் தெரியும்?
சேலைக்குள்ளாடும் மங்கையின் மேனி
மேனிக்குள்ளாடும் மனமெனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையின் தேனீ
நான் ஒரு ராணி பெண்களின் ஞானி
என் மனம் என்னவென்று
என்னையன்றி யாருக்குத் தெரியும்?
கணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்!
இப்பாடலின் மூலம் கவியரசு கண்ணதாசன் மிக தத்துவ ரூபமாக அவளது முதற்தமிழ் படமான ‘அவள் ஒரு தொடர்கதை’ யில் அவளது வாழ்வே ஒரு தொடர்கதையாக சோகம் மிகுந்ததாக சித்தரித்துக் காட்டுகிறார். தமிழர் செந்தாமரை வாசகர்கள் இப்பாடலின் அர்த்தத்தை தெளிவாகப் புரிந்தால் கலைமாமணி சினிமா நடிகை சுஜாதாவின் வாழ்வை அதாவது தனிப்பட்ட சோகங்கள் நிறைந்த வாழ்வை நன்கு புரிந்துக் கொள்வார்கள்.
அவரின் வாழ்வின் நிலையைப் பிரதிபலிக்கும் இன்னொரு பாடல் நூல்வேலி என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பாடல்களில் கலைமாமணி சுஜாதாவின் உணர்ச்சிமிக்க நடிப்பின் உச்சத்தையும், அவரது தனிப்பட்ட வாழ்வின் அவலங்களையும் காணலாம்.
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி
ஆனந்தக்கனவாகி
காரியம் தவறானால் கண்களில் நீராகி
ரகசியச்சுரங்கம் நீ
நாடக அரங்கம் நீ
சோதனைக்களம் அல்லவா
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா
ஒருகணம் தவறாகி
பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை
கண்களில் வடிப்பாயே
உண்மைக்கு ஒரு சாட்சி
பொய் சொல்ல பலசாட்சி
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி
அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும்
ஐயத்தில் தவிப்பாய் நீ
பாடல்: கவியரசு. இடம் பெற்ற படம் நூல்வேலி. கவியரசி இன்னொரு பாட்டில் நடிகை சுஜாதாவின் நல்ல மனத்தை, குழந்தைத்தனமான மனதை மிகத் தல்லியமாக இப்பாடல்களில் கவியரசு படம் பிடித்துக் காட்டுவதை அவதானிப்போம்.
“நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க
பூவுலகின் லட்சியங்கள்
பூப்போன்றே வாழும்
தெய்வ சொர்க்க நிச்சயந்தான்
திருமணாய் கூடும்
பொருத்தமென்றால் புதுப் பொருத்தம்
பொருந்திவிட்டஜோடி – நான்
புலவனென்றால் பாடிடுவேன்
கவிதை ஒரு கோடி
தனிமையிலும் மென்மையிலும்
தாமரைப்போல் நெஞ்சம்
தாய்க்குலத்தில் இலக்கணங்கள்
தலைவியிடம் தஞ்சம்
ஆலயமாய் வீடுதனை
அலங்கரிக்க வந்தாய் – நீ
வாழும்நிலை உனக்களித்தால்
வாழ்த்துகிறேன் நானே.
மணவாழ்க்கை அமைவதற்கோ
மனைவி வாய்க்க வேண்டும்
குலமகளாய் கிடைப்பதற்கோ
கொடுத்து வைக்க வேண்டும்
அருமைகளும் பெருமைகளும்
நிறைவது தான் இன்பம் – நீ
அத்தனையும் பெற்று விட்டாய்
ஆனந்தமாய் வாழ்க.
பாடல் இடம்பெற்ற படம் ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ – பாட்டை இயற்றியவர் – கவியரசு – கண்ணதாசன். மேலே கூறிய கவியரசு கண்ணதாசனின் சினிமாப் பாடல்வரிகள் சுஜாதாவின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரது மனம் பட்ட பாட்டை அதாவது அவரது சொந்த வாழ்வின் துயரச் சம்பவங்கள் இடம் பெற்ற போது மனம் மிக வேதனைப்பட்டு அம்மன அழுத்தத்தால் இருதயப் பாதிப்பு ஏற்பட்டு இளம் வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார். அதாவது தனது கணவனின் கொடுமைகளையெல்லாம் ஒரு சுமை தாங்கி போலத் தாங்கி, அவரது குடும்ப நன்மை கருதி விவகாரத்து எடுக்காமல், அவரது துணைவி படத்தில் கூறுவது போல “வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்திலொன்றாக வைக்கப்பட்டுள்ளார்.” சுஜாதா தனது தனிப்பட்ட வாழ்வில் தன் கணவனான ஜெயாகரோடு தன் சோகத்தைக் கூறி ஏற்படுத்திய தவறான உறவு, அவர் கூறியது போல “என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்”. அவ்வாறே மனித உறவுகள் எப்போதுமே சிறப்பு வாய்ந்தவை. அவை உருவாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட அவை பிரியும் போது ஏற்படும் வலியும், அந்தரமும் நிச்சயமின்மையும் அச்சமூட்டுவன. இவ்வாறு தான் நடிகை சுஜாதாவும் நம்பி ஏமாந்து கடுமையான மன அழுத்தத்திற்குட்பட்டு ஏப்ரல் 06, 2011இல் இறந்துப் போனார்.
முடிவுரை:
இக்கட்டுரையை நான் ஏன் எழுதினேன் என்பதை பின்வரும் பத்திகளில் மிகச் சுருக்கமாகக் கூறவுள்ளேன். முதலாவதாக நான் வாசகர்களுக்கு கூறுவது என்னவென்றால், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கூறியது போல “சிங்கத் தீவினிக்கோற் பாலம் அமைப்போம்” இந்த வகையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சுஜாதாவைப் போல கேரளத்தைப் பூர்வீகமானக் கொண்டிருந்தாலும் நான் படித்த கண்டியில் பிறந்து இந்திய தமிழ்த் திரையுலகத்திற்கும், தமிழ் நாட்டு அரசியலுக்கும் அதாவது தமிழ் சினிமாக்கலையை நல்ல முறையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக பத்து ஆண்டுகள் ஆண்டார். அதாவது இலங்கையிலிருந்து போய் இந்திய தமிழ்ச்சினிமா வரலாற்றிலும், அரசியலிலும் தனது சினிமா கலையின் ஆளுமையின் மூலம் வரலாற்றில் தடம் பதித்தவர். அவரது ஒப்பற்ற சாதனைகளைப் பற்றியும், பங்களிப்பைப் பற்றியும் இன்னொரு இது போன்ற கட்டுரையொன்றில் விபரமாகப் பார்ப்போம். அவர் இந்த முறையில் முதன்மையானவர். அதே போல நடிகை கலைமாமணி சுஜாதாவும் எனது அயற் கிராமத்தில் நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போலவே யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் பிறந்து பின்பு காலியில் வளர்ந்து இந்தியாவிற்கு அதாவது தனது 14 வயதில் கேளராவுக்குச் சென்று இந்திய பிரதான மொழிகளிலும், தமிழிலும் சக்தி வாய்ந்த சினிமாக்கலை ஊடகத்தின் மூலம் தடம் பதித்தவர். அவரது புகழையும், பெருமைகளையும் ஏற்கனவே இக்கட்டுரையில் விபரமாகப் பார்த்தோம். குறிப்பாக அவரது மொழித்திறமையாலும், நடிப்புத்திறமையாலும் இலங்கை மக்களாகிய எமக்கெல்லாம் பெருமையும் புகபம் தேடித்தந்தாரென்பதை தமிழர் செந்தாமரை வாசகர்களுக்குத் தெரியப்படுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். 300க்கு மேற்பட்ட படங்களில் நடித்த சுஜாதாவின் பெருமைகளை இயன்ற மட்டில் சுருங்கக் கூறியுள்ளேன்.
இந்த வகையில் இலங்கை மட்டக்களப்பு அமிர்தகழியில் பிறந்து தமிழ் நாட்டுக்குச் சென்று பல வெற்றிப் படங்களை இயக்கி அண்மையில் எம்மை விட்டு மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் தமிழ் சினிமாவுக்கான பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கதாகும். காமிராவின் மூலம் தமது தனித்திறமையையும், முத்திரையையும் பதித்தவர். இவரும் ஒரு வகையில் தமிழ் திரைப்பட உலகில் தடம் பதித்தவரென்றே கூறலாம். ஏனைய நடிகர்களான கொழும்பில் நடிகவேள் எம். ஆர். ராதாவின் இலங்கை மனைவிக்கு பிறந்து சரத்குமாரை மணந்த ராதிகாவின் சினிமாக்கலைக்கான பங்களிப்பு குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல. அதேபோல அண்மையில் அதாவது சென்ற வருடம் காலமான பொப்பிதை மன்னன் இந்தியாவிற்குச் சென்று அதாவது இலங்கை மலை நாட்டில் பிறந்து சுமார் 263 படங்களுக்கு மேல் நடித்த A.E. மனோகரனது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதியாக இக்கட்டுரையின் முடிவாக கூறுவதென்னவென்றால் கலா இரசனை அழகியல் மாணவனென்ற வகையில் ஏனைய ஊடகங்களைப் போல சினிமாக் கலையும் ஒரு சக்தி மிக்க ஊடகமாகும் என்பதையும், அதனை நல்ல முறையில் பாவித்து மேலே கூறிய கலைஞர்கள், நடிகர்கள் தத்தமது சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை தத்தமது நடிப்பாற்றலாலும், திறமையாலும் தமக்கும், எமக்கும் அதாவது இலங்கை மக்களாகிய எமக்கும் பெருமை சேர்த்ததோடு, இந்தியாவிற்கும் எமக்குமிடையே ஒரு கலைப்பாலத்தை அமைத்தார்களென்பதையும் இயன்ற மட்டில் எல்லோருக்கும் புரியும்படி பார்த்தோம்.
கே. ஆனந்தநாதன்., MA, MSW, RSW, Registered Social Worker with OCSWSSW















