LOADING

Type to search

உலக அரசியல்

ஐதராபாத் சாலைக்கு தனது பெயர் சூட்டப்பட்டதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார்

Share

ஐதராபாத்தில் உள்ள சாலைக்கு டொனால்டு டிரம்ப் பெயர் வைத்ததற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-அமைச்சராக ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார். இதனிடையே, அம்மாநிலத்தின் ஐதராபாத்தில் மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் அமைந்துள்ள சாலைக்கு டொனால்டு டிரம்ப் சாலை என்று தெலுங்கானா அரசு பெயர் வைத்துள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியொ கொர் பங்கேற்றார். இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள சாலைக்கு தனது பெயர் வைத்ததற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் சமூகவலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள சாலைக்கு டொனால்டு டிரம்ப் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் அமெரிக்கா அதிபராக நான் திகிழ்கிறேன். ஐதராபாத் சாலைக்கு எனது பெயர் வைத்ததற்கு நன்றி’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.