LOADING

Type to search

கனடா அரசியல்

ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின் இவ்வருடத்தின் ‘தியாகராஜ ஆராதனை’ இசை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

Share

கனடாவில் வெற்றிகரமாக இயங்கி கர்நாடக இசைத்துறைக்கு ஊக்கமளித்து வரும் ‘ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின்’ இவ்வருடத்தின் ‘தியாகராஜ ஆராதனை’ இசை உற்சவம் கடந்த 18ம் திகதி சனிக்கிழமையன்று மன்றத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

காலை தொடக்கம் மாலை வரை நடைபெற்ற இந்த ‘தியாகராஜ ஆராதனை’ இசை உற்சவத்தில் பல இசையாசிரியைகளின் மாணவ மாணவிகள் தங்கள் திறன்களை மேடையில் சமர்ப்பணம் செய்தார்கள். அன்றைய தினம் ஒன்றாரியோ இசைக் கலாமன்றத்தின் தலைவர் தம்பையா ஶ்ரீபதி உட்பட அனைத்து இயக்குனர் சபை உறுப்பினர்களும் அங்கு சமூகமளித்து பங்குபற்றிய இசை பயிலும் மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினார்கள்.