LOADING

Type to search

இந்திய அரசியல்

கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி தகுதி நீக்கம் – அதிமுக எம்.பி இன்பதுரை

Share

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: கட்சித் தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவரை தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தின் 10 ஆவது அட்டவணை பேரவைத் தலைவருக்கு அதிகாரம் தருகிறது. அவ்வாறு புகாருக்கு உள்ளானவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் முன் சட்டப்பிரிவு 163 ன்படி முதல்-அமைச்சரிடம் விளக்கம் கேட்டு ஆளுனர் திருப்தி அடைவது அவசியம். விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதை எதிர் கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் சட்டப்பிரிவு 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம். மணிப்பூர் மாநில அமைச்சர் தவுனோஜம் ஷியாம்குமார் சிங் வழக்கில் 2020 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு நல்ல உதாரணம். ஆக எல்லா நிலைகளிலும் அரசியலமைப்பு சட்டமே மேலோங்கி நிற்கும். இதுதான் நமது அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.