LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் ஶ்ரீ வரசித்திவிநாயகர் தேவஸ்தானமும் இணைந்து வழங்கிய ‘தமிழர் மரபுரிமை மாத விழா-2025’

Share

கனடாவில் கடந்த பல வருடங்களாக மொழியையும் சமயத்தையும் எமது சிறார்கள் மத்தியில் தக்கவைப்பதற்காவும் அவர்களுக்கு அறிவூட்டுவதற்காகவும் அரும்பணியாற்றிவரும், கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் ஶ்ரீ வரசித்திவிநாயகர் தேவஸ்தானமும் இணைந்து வழங்கிய ‘தமிழர் மரபுரிமை மாத விழா-2025’ கடந்த சனிக்கிழமை 7ம் திகதி கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


நிறுவனங்களின் அதிபரும் சிவாச்சாரியப் பெருமகனாருமாகிய சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக்குருக்கள் அவர்கள் அவரது துணைவியார் ஶ்ரீமதி ஜெயந்தி விஜயகுமாரக் குருக்கள் மற்றும் ஜெயா ஐயா ஆகியோரும் மற்றும் சிவாச்சாரியப் பெருமக்களும் இந்துக் கல்லூரியின் ஆசிரியர்கள் அதிபர் மற்றும் மாணவ மாணவிகளும் தங்கள் அர்ப்பணிப்பான ஈடுபாட்டை இந்த விழாவின் மீது கொண்டிருந்ததால், அன்றைய ‘தமிழர் மரபுரிமை மாத விழா-2025’ சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களின் உரைகள் மற்றும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் எமது மொழியின் பண்டைய சிறப்புக்களையும் தொன்மையையும் காட்டும் வகையிலும் தமிழ்ப் பண்பாட்டைக் காட்டும் வகையில் நெறிப்படுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

படங்களும் செய்தியும்: சத்தியன்