LOADING

Type to search

உலக அரசியல்

காங்கோவில் விமான விபத்தில் ராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேர் பலியானார்கள்

Share

காங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் ராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேர் பலியானார்கள். காங்கோவில் தென்மேற்கே கிக்வித் நகரில் இருந்து கின்ஷாசா நகர் நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில், லெப்டினென்ட் ஜெனரல் முதும்போ கடாளை தியண்டே மற்றும் லெப்டினென்ட் ஜெனரல் பகுமி லிகுலியா என்ற 2 மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் 12 பேர் பயணித்து உள்ளனர். இந்நிலையில், கெங்கே என்ற இடத்தில் சென்றபோது, விமானம் திடீரென்று விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் அதில் இருந்த ராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேரும் பலியானார்கள். இதனை காங்கோ ராணுவத்தின் செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல் எபோமி எகெங்கே வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி விமான போக்குவரத்து கழக வாரியத்தின் தலைவர் டிரைபோன் கின்-கை கூறும்போது, விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.