LOADING

Type to search

இந்திய அரசியல்

காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன்யென தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு கேள்வியெழுப்பியுள்ளார்

Share

காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன்யென தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு கேள்வியெழுப்பியுள்ளார். சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தி.மு.க. அரசின் திட்டங்களை எம்.எல்.ஏ. எ.வ.வேலு பட்டியலிட்டார்.  அப்போது பேசிய அவர், “தி.மு.க. ஆட்சியில் தலைவர்களுக்கு சிலைகள் மணி மண்டபங்கள் அமைத்து தந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம். முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை காமராஜர் உணவுத் திட்டம் என மாற்ற வேண்டிய அவசியம் என்ன? வேறு ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி, காமராஜர் பெயரை வைக்கலாமே? நாங்கள் வைத்த திட்டத்திற்கு நீங்கள் பெயர் வைப்பது ஏன்?. முதலமைச்சர் என்பது பொதுவான சொற்சொடர். அது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல. ஆகையால் ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு பெயர் மாற்றியது ஏன்?. ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் எனபெயர் வைக்கலாம் என கூறியபோது ஸ்டாலின் அதை மறுத்தார். முதல்வர் காலை உணவுத் திட்டம் என பெயர் வைத்தால் யாரும் அந்தப் பெயரை மாற்ற மாட்டார்கள் என ஸ்டாலின் கூறினார். நாங்கள் உருவாக்கிய திட்டத்துக்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும் என்பதே கேள்வி. காமராஜருக்கு சென்னையில் சிலை அமைத்து பிரதமர் நேருவை அழைத்துவந்து திறந்தோம். குடியாத்தம் தொகுதியில் காமராஜரை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தாதவர் அண்ணா. காமராஜருக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதிதான். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து பெருமை சேர்த்தார் கருணாநிதி” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தந்தை பெரியாரை கொள்கை தலைவர் என்கிறீர்கள். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது. ஆனால், கோவையில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நூலகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது என்பதனை அரசின் பார்வைக்கு கொண்டு வருகிறேன். பொதுப்பணித்துறை அமைச்சர் பிறந்த வடஆற்காடு மாவட்டம், இன்று அது வேலூர் மாவட்டம் “ என்று திமுக எம்எல்ஏ எ.வ.வேலு தெரிவித்தார்.