LOADING

Type to search

உலக அரசியல்

ஸ்பெயினில் பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்

Share

ஸ்பெயினில் பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தை திடீரென கலைத்து அந்த நாட்டின் பிரதமர் சான்செஸ் அறிவித்தார். பெரும்பான்மை இல்லாததால் நவம்பர் 29-ந்தேதி அவசர பொதுத்தேர்தலை சந்திப்பதாக தெரிவித்தார். ஸ்பெயின் நாட்டின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் உள்ளார். நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ‘காங்கிரஸ் ஆப் டெபுடீஸ்’ அவையில் மொத்தம் 350 இடங்கள் உள்ளன. பிரதமர் பெட்ரோ சான்செஸின் தற்போதைய சிறுபான்மை கூட்டணி அரசாங்கம் இந்த 350 இடங்களில் மொத்தம் 147 இடங்களை மட்டுமே தன் வசம் வைத்துள்ளது. அதாவது பிரதமர் சான்செஸின் சோசலிச கட்சி 121 இடங்களையும், இடதுசாரி கூட்டணி பங்காளிகள் 26 இடங்கள் வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 176 இடங்கள் தேவை என்ற நிலையில், சான்செஸின் இந்த இடதுசாரி கூட்டணி அரசு சட்டங்களை நிறைவேற்ற பிராந்திய மற்றும் சிறு கட் சிகளின் ஆதரவையே நம்பியிருந்தது. ஸ்பெயினில் விலைவாசி மற்றும் வீட்டு வாடகை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அப்போது வாடகை கொடுக்க முடியா ததால் மாட்ரிட் நகரில் 87 வயது முதியவர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. சான்செஸின் சிறுபான்மை அரசால் இந்த நெருக்கடியைச் சட்டப்பூர்வமாகச் சமாளிக்க முடியவில்லை. இதனால் மிகக் கடுமையான வாடகை உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 2 அவசர சட்டங்களை கொண்டு வந்தன. சான்செஸ் தலைமையிலான ஆளுங்கட்சி கொண்டு வந்த 2 அவசர சட்டங்களை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தோற்கடித்தன. பெட்ரோ சான்செஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கியதால் இந்தநிலை ஏற்பட்டது. இதனால் நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டது. நாடாளுமன்ற முடக்கத்தை உடைத்து புதிய பெரும்பான்மையைப் பெற பெட்ரோ சான்செஸ் தனது அமைச்சரவையை கலைப்பதாக அறிவித்தார். நாடாளுமன்றத்தில் அரசு கொண்டு வந்த சட்டங்களை எதிர்க்கட்சிகள் முடக்கியதால், சான்செஸ் தனது ஆட்சிக் காலம் முடியும் முன்பே (2027-க்கு முன்) நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, மக்களிடம் புதிய ஆதரவைக் கோரி தேர்தலைச் சந்திக்கிறார். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 29-ந்தேதி நடைபெறுகிறது. அதில் தனது கட்சி சார்பில் மீண்டும் அவரே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதுவரை பெட்ரோ சான்செஸ் தலைமையில் ஸ்பெயினில் இடைக்கால அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறும்.