கிளிநொச்சியில் நடைபெற்ற எழுத்தாளர் டக்ஷனா கிருஷ்ணானந்தனின் “குலதெய்வம்” கவிதை நூல் வெளியீடு!
Share
எழுத்தாளர் டக்ஷனா கிருஷ்ணானந்தனின் (குகதா) “குலதெய்வம்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கரைச்சிப் பிரதேச சபை புதிய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
கவிதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் “குலதெய்வம்” நூலிற்கான வெளியீட்டுரையினை கவிஞர் யோ. புரட்சியும், நயவுரையினை எழுத்தாளரும் தமிழாசிரியருமான திரு. கனகரெட்ணம் செந்தூரனும் வழங்கினர்.
”அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை” கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக தீபகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினர் வரிசையில் கரைச்சிப் பிரதேச செயலாளர் தவச்செல்வம் முகுந்தனும், சிறப்பு விருந்தினர்களாக பூநகரி ஓய்வுநிலை கோட்டக் கல்வி அதிகாரி நாகேந்திரம் கணேஸ்வரநாதன், ஓய்வுநிலை அதிபர் கந்தையா இரட்ணகுமார், கிளி/செல்வாநகர் அ.த.க. பாடசாலை அதிபர் சி. மகேந்திரராஜா ஆகியோரும், விருந்தினர்களாக கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி மருத்துவர் மா. ஜெயராசா, கவிஞர் வேல் லவன், சட்டத்தரணி திரு. தனபாலசிங்கம் லக்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.















