LOADING

Type to search

உலக அரசியல்

கென்யாவில் வேன் மீது லோரி மோதி கோர விபத்தில் மத நிகழ்ச்சிக்கு சென்ற 13 பேர் உயிரிழந்தனர்

Share

கென்யாவில் வேன் மீது லோரி மோதிய சம்பவத்தில் மத நிகழ்ச்சிக்கு சென்ற 13 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் நகூரு பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் சிறப்பு மத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்க மொம்பாசா நகரில் இருந்து வேனில் கிறிஸ்தவ பக்தர்கள் நகூரு பகுதிக்கு புறப்பட்டனர். அந்த வேனில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்நிலையில், நைரோபி – மொம்பாசா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையில் வேகாமாக வந்த லாரி எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.