LOADING

Type to search

இலங்கை அரசியல்

கொடிகாமத்திற்கு அருகில் உள்ள கச்சாய்க் குளத்தை புனரமைப்பது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி!

Share

பு.கஜிந்தன்

அதிகரித்த வெப்பம் காரணமாகக் கச்சாய்க் குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளதால், அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குளத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

​சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் கச்சாய்க் குளத்தில், இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், குளத்தைத் தூர்வாரி ஆழப்படுத்துவதன் மூலம் நீர்க் கொள்ளளவை அதிகரித்து, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.