LOADING

Type to search

இந்திய அரசியல்

கொல்கத்தா விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்

Share

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் எனவும் கூறி மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர்கள், உடனடியாக விமான முனையம் மற்றும் பிற பகுதிகளில் தீவிர சோதனையை தொடங்கினர். மேலும் விமான நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து இடங்களும் முழுமையாக சோதிக்கப்பட்டன. இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.