LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் அறிவித்தல்

Share

பொதுக் கூட்டம்

அன்புடையீர்,

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவும் 12.9.2026 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்வு இடம்பெறும் இடம் பற்றிய விபரங்களை பின்னர் அறியத் தருவோம். பொதுக் கூட்டத்தில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அங்கத்தவர்கள் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்தின் அங்கத்தவர்கள், நிர்வாகசபை உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இறுதித் திகதி 03.09.2026. நிர்வாகசபை உறுப்பினர்களுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்ப விரும்புவோர் தலைவர் அல்லது செயலாளருடன் தொடர்பு கொள்ளலாம்.

ஆயுட்கால அங்கத்தவர்கள் தவிர்ந்த ஏனைய அங்கத்தவர்கள் அடுத்த ஆண்டுக்கான அங்கத்துவத்தை புதுப்பிப்பதற்கான இறுதித் திகதி 12.09. 2026 ஆகும்.

1) kana-ravi@hotmail.com

2) vasuki.nakularajah@gmail.com

அன்புடன் தலைவர் – (ரவி கனகசபை) 416 301 9027

செயலாளர் – (வாசுகி நகுலராஜா) 647 208 4148

பொருளாளர் – இராஜ்குமார் குணரட்ணம்