சி. ஜோசப் விஜய் எனும் நான்… பதவி ஏற்றார் விஜய்
Share
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானது முதல் தமிழ்நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்த தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பது எப்போது? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து அறுதிபெரும்பான்மையுடன் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்பார் என்ற அறிவிப்பு வந்ததும் மக்கள் அனைவரும் பெருமூச்சு விட்டதுடன் அவர் பதவியேற்பதை காணவும் ஆவலுடன் இருந்தனர். அந்த வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய், சி.ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லி முதலமைச்சராக பதவியேற்றார்.















