LOADING

Type to search

இந்திய அரசியல்

பெரியார் திடலில் முதலமைச்சர் விஜய் – கி.வீரமணியுடன் சந்திப்பு

Share

தமிழகத்தின் 12வது முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் காலை பதவியேற்றார். தமிழக ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தலைமை செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு வந்துள்ளார். அவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்தார். பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.