சீனாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்
Share
சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹுபே மாகாணம் ஹுன்ஷி, ஹுன்ஹங், இஹொ, ஜினிங் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளநீர் நகரங்களை சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 275 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, அந்நாட்டின் கன்சு மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.















