LOADING

Type to search

உலக அரசியல்

செங்கடலில் எகிப்து கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்

Share

செங்கடலில் எகிப்து கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சி படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். ஏமன் அருகே செங்கடலின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பாப் அல்-மந்தப் நீரிணை அருகே சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மீட்புக் குழுவினர் சிகிச்சை அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்களே காரணம் என ஏமன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும், தாக்குதல் குறித்து ஹவுதி அமைப்பு உடனடியாக பொறுப்பேற்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக செங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் சர்வதேச கடல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் செங்கடல் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.