LOADING

Type to search

சினிமா

ஜன நாயகன்; அதிகாரபூர்வமாக வெளியாகும் வரை காத்திருந்திருங்கள் – மமிதா பைஜு

Share

 ஜன நாயகன் படம் அதிகாரபூர்வமாக வெளியாகும் வரை காந்திருங்கள் என மமிதா பைஜு விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தினமும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கும் பலரின் கடின உழைப்பு, பேரார்வம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலமே ஒரு திரைப்படம் உயிர் பெறுகிறது.

அது சட்டவிரோதமாகப் பரப்பப்படுவதைக் காண்பது உண்மையிலேயே ஏமாற்றமளிக்கிறது. சில தருணங்கள், அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தின்படியே, பெரிய திரையில் ஒன்றாகக் கண்டு ரசிக்கப்பட வேண்டியவை. அது அதிகாரபூர்வமாக வெளியாகும் வரை காத்திருந்து, சரியான முறையில் அதைக் கண்டு மகிழ்வோம். தயவுசெய்து திருட்டுத்தனத்தை ஆதரிக்காதீர்கள். அதன் மூலமே நாம் சினிமாவையும், அதற்குப் பின்னால் உள்ள அனைவரையும் பாதுகாக்க முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.