ஜார்கண்டில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர்
Share
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வடஇந்திய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, இடி மின்னல் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு வயது சிறுவன் உட்பட எட்டு பேர் உயிரிழந்ததாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த எட்டு பேரில், மூன்று பேர் ஹசாரிபாக் மாவட்டத்திலும், மீதமுள்ளவர்கள் பலாமு, லோஹர்தகா, ராம்கர், மேற்கு சிங்பூம் மற்றும் கோடா மாவட்டங்களிலும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















