LOADING

Type to search

இந்திய அரசியல்

டிங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாமல் மக்களின் உயிரோடு விளையாடுவதாயென தமிழக வெற்றி கழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்

Share

தமிழ் நாடு முழுவதும் பரவி வரும் டிங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்காமல், மக்களின் உயிரோடு  தமிழக வெற்றி கழக அரசு விளையாடுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக வெற்றி கழக அரசின் அலட்சிய மனப்பான்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சுணக்கம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் டிங்கு காய்ச்சல் மளமளவென பெருகி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. “தமிழ் நாட்டில் (21.9.2026) வரை 17,348 பேருக்கு டிங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உண்ணிக் காய்ச்சலால் இதுவரை 4,653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21.9.2026 அன்று ஒரு நாளில் மட்டும் 71 பேருக்கு டிங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது” என்று சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

டிங்கு பரவுகிறது என்று பத்திரிகைகளும், பொதுமக்களும் எச்சரிக்கை செய்தபோதும், அதனை தமிழக வெற்றி கழக அரசு கவனத்தில் எடுக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தபோதும், அது ஸ்க்ரப் டைபஸ் உண்ணிக் காய்ச்சல் என்று திசை திருப்பும் நடவடிக்கையில் தீவிரம் காட்டிய அளவுக்கு, முறையான சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

தமிழ் நாட்டில் அதிகரித்துவரும் டிங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில், சுகாதாரத் துறை அமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்பது கடுமையான கண்டனத்திற்குரியது. டிங்கு காய்சல் குறித்து ஒரு விழிப்புணர்வு காணொளி வெளியிட்டது மட்டும் போதும் என்று அமைச்சர் அருண்ராஜ் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிட்டுப் பேசி, டிங்கு பாதிப்பு குறைவு என்று சமாளிக்கிறாரே தவிர, முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வக்கில்லை. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதல் 20 நாட்களில் பதிவான டிங்கு பாதிப்பைவிட, இந்த ஆண்டு கடுமையாக அதிகரித்துள்ளது என்பதே உண்மை. ஆனால், அமைச்சர் வசதியாக முந்தைய மாதங்களின் புள்ளி விபரங்களைக் காட்டி பொய் சொல்கிறார். சுகாதாரத் துறை அமைச்சர், டிங்கு காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சை முறைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டும்; டிங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் வீடு வீடாகச் சென்று கொசு உற்பத்தி இடங்களைக் கண்டறிந்து அவைகளை அகற்றி மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்குரிய உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும். டிங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக வெற்றி கழக அரசை வலியுறுத்துகிறேன்.