தனுஷின் ‘இட்லி கடை’ படம் ஓராண்டு நிறைவடைந்துள்ளது
Share
தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி வெளியான திரைப்படம் ‘இட்லி கடை’. தனுஷின் 52-வது படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
வெளிநாட்டில் வெற்றி பெற்று சொந்த ஊருக்கு திரும்பும் தனுஷ், தனது தந்தை நடத்தி வந்த இட்லி கடையை ஏற்று நடத்துவதுதான் படத்தின் மையக்கதை. குடும்ப உறவுகள், பாசம் மற்றும் வாழ்க்கையின் முக்கியமான உணர்வுகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. திரையரங்குகளில் வெளியான ‘இட்லி கடை’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஓ.டி.டி. தளத்திலும் இப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.















