LOADING

Type to search

உலக அரசியல்

பிளைதுபாய் விமான சம்பவத்தில் துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு இருக்கலாமென அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்

Share

இஸ்ரேல் நோக்கி சென்ற விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற பிளைதுபாய்’ விமானத்தின் துணை விமானிக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். துபாயில் இருந்து நேற்று புறப்பட்ட பிளைதுபாய் எப்.இசட் 1073 என்ற விமானம் அடுத்த 2½ மணி நேரத்தில் திடீரென்று 14 ஆயிரம் அடிக்கும் கீழே செங்குத்தாக இறங்கியது. இதனால் பயணிகள் பதற்றமடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக அந்த விமானத்தில் இருந்து ஸ்குவாக் 7700 மற்றும் 7500 ஆகிய அவசரகால சிக்னல்கள் அனுப்பப்பட்டது. மேலும், இஸ்ரேல் விமான நிலையத்திற்கு அவசரகால தகவல் அனுப்பப்பட்டதும் அந்நாட்டின் ராணுவம் உடனடியாக தனது போர் விமானங்களை வானில் பறக்கவிட்டது. உள்ளே என்ன நடக்கிறது? என்பது தெரியாத நிலையில் விமானம் சவுதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டது. .விமானத்தில்இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை , துணை விமானி கத்தியால் தாக்கியதுடன், விமானத்தை கட்டுப்படுத்த முயன்றது தெரியவந்தது.இந்த சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், “இதுகுறித்து தற்போது விசாரித்து வருகிறோம். நான் கேள்விப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், பதில் ஆம் என்றே கூறுவேன். ஆனால், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார். மேலும், இந்த தாக்குதலுக்கு ஈரான் காரணமாக இருந்தது உறுதி செய்யப்பட்டால், ஈரான் மீது “மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டிரம்ப் எச்சரித்தார். எனினும், இதுவரை ஈரானின் தொடர்பை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு உள்ளதா என்பதை தற்போதைய நிலையில் உறுதியாக கூற முடியாது என்றும், விசாரணை முடிந்த பிறகே இதுகுறித்து தெளிவாக தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்