LOADING

Type to search

சினிமா

தனுஷின் கர படம் 3 நாளில் ரூ.28.87 கோடி வசூல்

Share

இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கர”. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷூடன் ஜெயராம், ரவிக்குமார், கருணாஸ், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தப் படம் கடந்த 30-ஆம் தேதி உலகளவில் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான கர திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியான முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனாக ரூ.6.20 கோடி வசூலானது. இந்தப் படம் முதல் இரு நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷென் ரூ. 15.20 கோடியாக அதிகரித்தது. இந்த நிலையில், கர திரைப்படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ. 28.87 கோடி வசூலித்துள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை அடுத்து, படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.