LOADING

Type to search

சினிமா

தனுஷ் நடிக்கும் ‘கர’ திரைப்படம் ஏப்.30ல் வெளியீடு

Share

தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில்  தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளனர். வரும் ஏப்ரல் 30, 2026 அன்று படம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் ராஜா கூறியதாவது: “கர படத்தில் அரசியல் பேசி உள்ளோம். அது தான் படத்தின் மையக்கரு. ஆனால் அது மெயின் ஸ்ட்ரீம் அரசியலாக இருக்காது. இந்த படத்தின் கதை வேலூரில் நடந்தது. நான் ராமநாதபுரத்தில் நடப்பது போல் மாற்றி உள்ளேன். ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய இரண்டுக்கும் வட்டார வழக்குகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே டவுன் சவுத் என்ற பொதுவான வட்டார வழக்கை தான் படத்தில் பயன்படுத்தி உள்ளோம். கதாநாயகி மமிதாவிற்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. நாயகனை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர் தான் உதவுவார். கர படத்தில் பல மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்களை பெரிதாக நான் இயக்கவில்லை. ஒவ்வொருவரின் கெட்டப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதன் மூலம் அவர்களுக்கு அந்த கதாபாத்திரம் பற்றிய ஒரு புரிதல் வந்தது. படத்தில் தனுஷ் சாரோடு படம் முழுவதும் பயணிக்கும் ஒரு முக்கிய கூட்டாளியாக பிரித்வி நடித்துள்ளார். தனுஷ் சாருக்கு அப்பாவாக கருணாஸ் சாரும், இவர்களோடு ஜெயராம், சுராஜ், ஸ்ரீ ஜாரதி உள்ளிட்ட கிட்டத்தட்ட ஏழு முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் உள்ளனர். எனக்கு இந்த படத்தில் சேலஞ்சிங் சீனாக எதுவும் இல்லை. நான் அனைத்தையும் ஸ்டோரி போர்ட் மூலம் முன்பே செய்து விடுவேன். ஆனால் இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகம் இருந்ததால் அப்படி செய்ய முடியவில்லை. தனுஷ் சாரை அவரது போக்கில் விட்டால் அவர் ஒரு விஷயம் செய்வார். அது போல் பல மேஜிக் இந்த படத்தில் நடந்தது. தனுஷ் சார் ஒரு இயக்குனர் ஆகவும் உள்ளதால் அவர் நிறைய விஷயங்களை சொல்லுவார். படத்தின் தொடக்கத்திலேயே தனுஷ் சார், என்னை ஒரு உதவி இயக்குனராக எடுத்துக்கொள்ளுங்கள். நான் பல விஷயங்கள் சொல்லுவேன், உங்களுக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். இதுவும் ஒரு திரில்லர் படம் தான். அடுத்து என்ன நடக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியாத அளவில் இருக்கும். ஜிவி பிரகாஷ் உண்மையிலேயே ஒரு ஜீனியஸ் தான். அவரிடம் உட்கார்ந்த 10 நிமிடங்களில் ட்யூன் வந்துவிடும். முதலில் சுராஜ் வெஞ்சாரமூடு சார் கதாபாத்திரத்திற்கு நிறைய பேரிடம் பேசினோம். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு அழுத்தம் இல்லை என்று கூறி மறுத்து விட்டனர். பின்பு அந்த கதாபாத்திரத்தில் சில மாற்றங்கள் செய்தபோது, ஒரு ஹீரோ ரேஞ்ச்க்கு உயர்ந்தது. சுராஜ் வெஞ்சாரமூடு சாரை நிறைய படங்களில் பார்த்துள்ளேன். ஆனால் அவர் தமிழில் நடிப்பார் என்பது தெரியாது. வீர தீர சூரன் படத்தில் அவர் நடித்த பின்பு தான் அவரிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையை கேட்டவுடன் புரிந்து கொண்டு நடிக்க சம்மதித்து விட்டார். படத்தில் வயலன்ஸ் மிகவும் கம்மியாகத்தான் இருக்கும். கதைக்கேற்ற ஆக்சன் காட்சிகள் இருக்கும். படத்திற்கு சென்சார் முடிந்து விட்டது. ஏப்ரல் 30ஆம் தேதி படம் வெளியாகிறது.” என்று கூறினார்.