LOADING

Type to search

சினிமா

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

Share

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இருப்பினும், கொளத்தூரில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேற்று மாலை நேரில் சென்று மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இதனிடையே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியுள்ளது. மேலும் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்று ரஜினிகாந்த் அவரை சந்தித்துள்ளார். ‘இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.