LOADING

Type to search

இந்திய அரசியல்

தீயணைப்புத்துறை ஆணையத்தலைவர் பதவியில் இருந்து முன்னாள் காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா செய்தார்

Share

தீயணைப்புத்துறை ஆணையத்தலைவர் பதவியில் இருந்து முன்னாள் காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா செய்துள்ளார். சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தீயணைப்பு ஆணையத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் கடந்த 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இருந்தபோதிலும், ஓய்வு பெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்பே அப்போதைய திமுக அரசு அவருக்கு புதிய பொறுப்பை வழங்கியது. அதாவது, தீயணைப்புத் துறை ஆணையத் தலைவர் பொறுப்பில் சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். காவல் துறை ஆணையம் போல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு புதிய ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். கடந்த 2025 செப்டம்பர் மாதம் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட சங்கர் ஜிவால், 10 மாதங்கள் அந்தப் பொறுப்பை வகித்த நிலையில், ராஜினாமா செய்துள்ளார். அவருடன் ஆணையத்தின் உறுப்பினர்களாக செயல்பட்ட சத்தியமூர்த்தி, நமச்சிவாயம், இக்ராம் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், சங்கர் ஜிவால் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.