LOADING

Type to search

இந்திய அரசியல்

தீரன் சின்னமலையின் வீரத்தையும் புகழையும் போற்றி வணங்குகிறேன்- எடப்பாடி பழனிசாமி

Share

.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய சுதந்திர போரில் நெஞ்சுரத்தோடு தனது இறுதி மூச்சு வரை போராடி, அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தன் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ்மகன், ஓடாநிலைக்கோட்டையின் ஒப்பற்ற மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன். அன்று சின்னமலையைக் காட்டிக் கொடுத்த துரோகியைப் போல, இன்றும் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டின் நீராதார உரிமைகளையும், பாலியல் எஸ்ஐஆர்-களிடம் தமிழகப் பெண்களின் பாதுகாப்பையும், போதை மாபியாக்களிடம் இளைஞர்களின் எதிர்காலத்தையும் அடகு வைத்துவிட்டது திமுக எனும் தீயசக்திக் கூட்டம். ஒவ்வொரு தமிழரின் வாழ்வையும் காக்க வேண்டிய வரலாற்றுப் போர்களத்தில், சின்னமலை விதைத்த தீரத்தோடு சமர் செய்து, தீயசக்தி திமுகவை வேரடி மண்ணோடு வீழ்த்திட சூளுரைக்கிறேன் என்று கூறியுள்ளார்.