LOADING

Type to search

இந்திய அரசியல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்

Share

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். த.மா.கா. மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “தற்போது தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின்பு ஒரு கூட்டணி என்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தமிழ் மாநில காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வெல்லக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு தற்போது என்ன செய்யவேண்டும் என்பதை கூறுவதற்காகத்தான் தற்போதைய கூட்டம். எந்த கூட்டணியோடும் எங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது. நட்புரீதியாக அதிமுக, பாஜக கூட்டசிணியோடு இருந்தாலும், உள்ளாட்சி தேர்தலுக்காக தனித்து களமிறங்குகிறோம். கூட்டணியில் இயக்கத்தின் அரசியல் வளர்ச்சி குறைவதாக நிர்வாகிகள் கருதுகின்றனர். உள்ளாட்சி தேர்தல் வரும் வரை எங்கள் கட்சி தனித்தன்மையோடு செயல்பட்டு மீண்டும் அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நட்புடன் விலகுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக கூட்டணியிலேயே பயணித்ததால் எங்கள் வலிமை குறைந்துள்ளதாக கருதுகிறோம். அதனால் வரும் காலங்களில் கட்சியை பலப்படுத்த எங்கள் பணிகள் தொடங்கும். தேர்தல் நேரத்திலேயே கூட்டணி. அதுவரை எங்கள் கட்சியை பலப்படுத்த உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.