LOADING

Type to search

சினிமா

நடிகர் நெப்போலியன் நடிக்கும் புதிய திரைப்படம் “அமெரிக்க ஆவி”

Share

நடிகர் நெப்போலியன் நடிக்கும் புதிய திரைப்படம் “அமெரிக்க ஆவி”. நெப்போலியன் நடிப்பில் உருவான ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் நெப்போலியன் பேசுகையில், “ ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தில் 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் மிக சிலர் மட்டுமே இங்கு இந்த நிகழ்விற்காக இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இதில் நடித்திருக்கும் அனைவரும் பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இந்த படத்திற்காக ஒதுக்கி தரும் நேரத்தை பயன்படுத்தி, 75 நாட்களில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். திங்கள் முதல் வெள்ளி வரை அனைவரும் பரபரப்பாக இயங்குவார்கள். அதில் அவர்கள் எங்களுக்காக ஒதுக்கித் தரும் நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இது மிகவும் கடினமான விசயம் தான். அமெரிக்காவில்.. இதுவரை சினிமா சூட்டிங்கை நேரில் வேடிக்கை பார்க்காதவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நானும், இயக்குநரும் பயிற்சி கொடுத்து இதில் நடிக்க வைத்திருக்கிறோம். குருநாதர் பாரதிராஜாவிற்கு மரியாதையை செலுத்தும் விதமாக ‘அமெரிக்க ஆவி’ படத்தில் சிறப்பு காட்சி வைத்துள்ளேன். சிவாஜி நடித்த ‘பாரத விலாஸ்’ படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு இந்த படம் மிகவும் வித்தியாசமான படம். பொழுதுபோக்காகவும் இருக்கும்” என்றார்.