LOADING

Type to search

இந்திய அரசியல்

நார்வே சதுரங்க போட்டியில் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்தார்

Share

நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 20 வயதான பிரக்ஞானந்தா, இறுதிச் சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பட்டக்தை உறுதி செய்தார். இந்த நிலையில் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ‘நார்வே செஸ் தொடரில்’ இந்திய கிராண்ட்மாஸ்டரும் நம் தமிழ்நாட்டின் செல்வனுமாகிய பிரக்ஞானந்தா அவர்கள் வெற்றிபெற்றுள்ள செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. ‘நார்வே செஸ் சாம்பியன்’ என்ற பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமிதத்தை நம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் அளித்துள்ள செல்வன் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் “தமிழ்நாடு வீரர்கள் திட்டத்தின்” பயன் ஏற்பாளரான செல்வன் பிரக்ஞானந்தா அவர்களின் வெற்றிக்குப் பெருமை கொள்கிறோம். உலக அரங்கில் தமிழ்நாட்டு இளைஞர்கள் சாதனைகள் பல படைப்பதற்கு இந்த வெற்றி முன்னுதாரணமாக அமைந்துள்ளது. நமது வீரர் – வீராங்கனையர்கள் மேலும் பல சாதனைகள் படைத்து, தமிழ்நாட்டின் திறனையும் சிறப்பையும் உலகறிய செய்யத் தமிழ்நாடு அரசு உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.