LOADING

Type to search

இந்திய அரசியல்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்

Share

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் என 2 ஆக பிரிந்தது. இதில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். தொடர்ந்து இரு தரப்பினரிடையே பிரச்சினை அதிகரித்து வந்தது. அதிமுக கொறடாவாக தங்களை நியமிக்கக்கோரி இரு தரப்பினரும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், கடலூர் எம்.சி.சம்பத், தருமபுரி பாப்பிரெட்டிபட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, சேலம் சங்ககிரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், சேலம் வீரபாண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜமுத்து, விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ், விருதுநகர் சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உள்ளிட்ட பலர் தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.