LOADING

Type to search

உலக அரசியல்

நைஜீரியாவில் ராணுவ விமானம் ஆற்றில் விழுந்து விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்

Share

நைஜீரியாவில் ராணுவ விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் பெனின் நகரில் இருந்து லகோஸ் நகருக்கு நேற்று ராணுவ விமானம் புறப்பட்டது. அந்த ராணுவ விமானத்தில் 32 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், லகோஸ் நகர் அருகே சென்றபோது விமானம் அப்பகுதியில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 32 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்களையும், உயிரிழந்தவர்களில் சிலரின் உடல்களையும் மீட்டுள்ளனர். ஆனால், இந்த விமான விபத்தில் உயிரிழந்த சிலரின் உடல்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.