பவானிபூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி
Share
மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி 23-ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரியும் அங்கு போட்டியிடுகிறார். இந்நிலையில், பவானிபூர் தொகுதியில் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார்.















