LOADING

Type to search

உலக அரசியல்

பிரபல ரவுடி ‘கோல்டி பிரார்’ குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.9.6 கோடி பரிசு வழங்கபடுமென அமெரிக்கா அறிவித்துள்ளது

Share

இந்தியாவை சேர்ந்த பிரபல ரவுடி குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.9.6 கோடி பரிசு வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. காலிஸ்தான் பிரிவினை வாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை வழக்கில், முக்கியக் குற்ற வாளியாகக் கருதப்படும் இந்தியாவை சேர்ந்த பிரபல ரவுடி சதிந்தர்ஜீத் சிங் என்கிற ‘கோல்டி பிரார்’ குறித்த தகவல்களை வழங்குவோருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் ரூ. 9.6 கோடி) பரிசு வழங்கப்படும் என அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டி கேஷன் (எப்.பி.ஐ.) அறிவித்துள்ளது. கோல்டி பிரார் எப்.பி.ஐ. அமைப்பின் ’10 மிக முக்கியத் தேடப்படும் குற்றவாளிகள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ‘இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவர் ‘இந்தியாவில் செயல்படும் பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் குற்றக் கும்பலின் அமெரிக்கத் வட தலைவராகச் செயல்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் இவர் ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கலாம் என்பதால், இவர் மிகவும் ஆபத்தானவர் என எப்.பி.ஐ எச்சரித்துள்ளது.

எளிய குடும்பத்தைச் சேர்ந்த கோல்டிபிரார் பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை பஞ்சாப் காவல்துறையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். அவர் கல்வி மூலம் ஒரு மரியாதைக்குரிய தொழிலைத் தொடர வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்பினர். ஆனால் கோல்டி பிராரின் கல்லூரி வாழ்க்கை அவரை வேறு திசைக்கு மாற்றியது.

ஆரம்பத்தில், அவர் சாதாரண மாணவராகவே அறியப்பட்டார். சண்டிகரில் படித்துக் கொண்டிருந்த போது பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் மாணவர் அரசியலில் ஈடுபட்டார். இந்தக் கால கட்டத்தில் தான் அவர் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் அமைப்புடன் தொடர்புடைய மாணவர்களையும், பின்னர் கும்பல் தலைவனான லாரன்ஸ் பிஷ்னோயையும் சந்தித்தார். அந்த நேரத்தில், லாரன்ஸ் பிஷ்னோய் மாணவர் அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு, படிப்படியாகத் தனது செல்வாக்கை விரிவு படுத்தி வந்தார். இந்த நட்பு பிற்காலத்தில் சர்வதேச ரவுடிக்கும்பலில் ஒன்றாக உருவெடுத்தது. தற்போது சர்வதேச அளவில் – தேடப்படும் குற்றவாளி ஆகி உள்ளார்.