புதிய கல்விச்சீர்திருத்த செயற்பாட்டுக்கு வளமூட்டும் ‘திறன் வகுப்பறைச்செயற்பாடு’
Share
கடந்த 14 ம் திகதி யாழ்ப்பாணம் கைதடி குருசாமி வித்தியாலயத்தில் IMHO மற்றும் Ratnam Foundation இனால் வழங்கப்பெற்ற smart board கற்றல் உபகரண வகுப்பறைத்தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களின் பயன்பாடும் கற்றல் மற்றும் கற்பித்தலும் அவதானிக்கப்பட்டது.
இப்பாடசாலையில் மொத்தமாக 108 மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள். அதில் 36 மாணவர்கள் ஆரம்பபிரிவில’ கல்விகற்கின்றனர். இப்பாடசாலையில் உள்ள 17 ஆசிரியர்களில் நால்வர் ஏற்கனவே திறன்வகுப்பறைச் செயற்பாட்டு கற்பித்தலில் எம்மால் பயிற்ச்சி அளிக்கப்பெற்றவர்கள், இன்று இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்விச்சீர்திருத்த செயற்பாட்டில் திறன் பலகை கற்றலுக்கான பிரதான உபகரணமாக இருப்பதால் மாணவர்களின் செயற்பாட்டை வளப்படுத்துவதில் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO – மற்றும் Ratnam Foundation ) நிறுவனங்களின் பங்கு சிறப்பானது என IMHO கல்விக்கான ஆலோசகர் மு.இராதாகிருஷ்ணன் தனதுரையில் குறிப்பிட்டார்.
அத்துடன் ஆரம்ப பிரிவுமாணவர்களின் அடிப்படை தேர்ச்சிகளுக்கு உதாரணமாக எழுத்துபொறிமுறை திறன்களுக்கு எவ்வித பங்கமும் வராமல் திறன்வகுப்பறை செயற்பாட்டை ஆசிரியர்கள் நன்கு திட்டமிடவேண்டும் என குறிப்பிட்டார் மாணவர்களின் செயற்பாட்டை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் மிகுந்த விருப்புடன் கற்றலில் ஈடுபட்டனர். மதிப்பீட்டின் போது எல்லோருமே அடிப்படைக்கற்றல் தேர்ச்சியினை குறித்த அலகில் பெற்றிருந்தனர். இப்பாடசாலையின் வளர்சிக்கு இத்திறன் வகுப்பறை மிகுந்த ஒரு கொடையாகும் என அதிபரும் பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளரும், முன்னாள் ஒய்வுநிலை அதிபரும் தமது உரைகளில் விதந்து குறிப்பிட்டு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்வுகள் மிகச்சிறப்பாக அமைந்தன. மாணவர்களின் அன்றைய ஈடுபாடு விதந்துரைக்கத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது
















