முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்
Share
பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக 2 நாட்களுக்கு முன் பதவியேற்றார். இதற்கிடையே, முதல் அமைச்சர் நிதிஷ்குமார் பீகார் அமைச்சரவையை கலைத்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகைக்கு வந்த முதல் அமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.
நிதிஷ்குமார் ராஜினாமாவுக்கு பிறகு பீகார் மாநில புதிய முதல் அமைச்சர் பெயரை பா.ஜ.க. அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.















