LOADING

Type to search

இந்திய அரசியல்

மூதாட்டியிடம் டம்மி 500 ரூபாய் நோட்டை கொடுத்து மாம்பழம் வாங்கிய பெண் கைது

Share

சென்னை திருவொற்றியூர் சந்தை பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (67) பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் கடை அமைத்து சீசனுக்கு ஏற்றார் போல் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். மாம்பழ சீசன் துவங்கி உள்ளதால் வழக்கம் போல் நேற்று மாம்பழங்களை மூதாட்டி ஜெயலட்சுமி விற்பனை செய்துள்ளார். மாம்பழம் வாங்க வந்த பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் டம்மி 500 ரூபாய் கொடுத்து 150 ரூபாய்க்கு மாம்பழம் வாங்கிவிட்டு மீதி பணத்தை வாங்கிச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து பையில் வைத்திருந்த 500 ரூபாய் எடுத்துப் பார்த்தபோது மூதாட்டி ஜெயலஷ்மிக்கு சந்தேகம் எழுந்துள்ளது அக்கம்பக்கத்தினரிடம் ரூபாய் நோட்டை காண்பித்தபோது இது டம்மி 500 ரூபாய் என கூறியதும் மூதாட்டி ஜெயலட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வியாபாரம் செய்ய உதவியாக இருந்த கணவரும் இறந்த நிலையில் தன்னந்தனியாக பழம் வியாபாரம் செய்து சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ செலவை செய்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் டம்மி 500 ரூபாய் கொடுத்து பெண் ஒருவர் ஏமாற்றியதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கண் கலங்கினார். இதை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் பாட்டிக்கு உதவி செய்து வருகின்றனர். திருவொற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர் மகன் இளையவன் சங்கர் பாட்டியை சந்தித்து ஆறுதல் கூறி அவருக்கு வியாபாரம் செய்ய ரூபாய் 5 ஆயிரம் அளித்தார். கஷ்டப்படும் வியாபாரிகளிடம் இதுபோன்று செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மூதாட்டியிடம் 500 ரூபாய் டம்மி நோட்டை கொடுத்து ஏமாற்றிய எர்ணாவூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 35) என்பவரை கைது செய்து எச்சரித்த காவல்துறை காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது அவரிடம் விசாரித்தபோது பல ஆண்டுகளாக பாட்டியிடம் பழம் வாங்கி வருகின்றேன். எனக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் யாரோ கடைகளில் விற்கப்படும் டம்மி 500 ரூபாய் நோட்டை என் கைப்பையில் வைத்து உள்ளனர். அது தெரியாமல் நான் பாட்டியிடம் கொடுத்து பழம் வாங்கி வந்தேன் என்றார்.

இதற்கிடையில் பத்திரிகைகளில் செய்தியை பார்த்த அந்தப் பெண் எங்கே தன்னை பிடித்து விடுவார்கள் என்று நினைத்து இரவோடு இரவாக வீட்டை மாற்றி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.