LOADING

Type to search

சினிமா

‘மொத ராத்திரி’ படத்தின் பதாகை வெளியானது

Share

‘மொத ராத்திரி’ படத்தின் பதாகை வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களை தொடர்ந்து, மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். புதிதாகத் திருமணமான ஜோடியின் காதல் நகைச்சுவைத் திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ‘மொத ராத்திரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. தற்போது பின்னணிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் பதாகை தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதாகை படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.