யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டிலும் வெளியிடப்பெற்று பின்னர் கொழும்பிலும் அறிமுகம் செய்யப்பெற்ற பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ எனும் அரிய நூல்
Share
ஏற்கெனவே யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டிலும் வெளியிடப்பெற்று பின்னர் ஆயிரக்கணக்கான வாசகர்கிளன் கரங்களிற்குச் சென்றுள்ள பொ. ஐங்கரநேசனின்வேர்முகங்கள்’ எனும் அரிய நூல் கலை இலக்கியப் பேராளுமைகளுடன் இதன் அறிமுக விழா கடந்த வியாழக்கிழமை (27.08.2026) கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஊடகங்களுக்காக பொ. ஐங்கரநேசன் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு ‘வேர்முகங்கள் என்ற பெயரில் எங்கடபுத்தகங்கள் பதிப்பகத்தின் ஊடாக வெளியாகியுள்ளது. புகழ்மிக்க இருபது கலைஇலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள் அடங்கிய இந்த நூலின் அறிமுகவிழா சமூக ஆய்வாளர் தெ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது இவ்வறிமுக விழாவில் கருத்துரைகளைச் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா, மொழிபெயர்ப்பாளர் அம்பிகை டிவகலாலா போமன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தார்கள்.

சட்டத்தரணி ந. காண்டீபன் அறிமுக உரையை நிகழ்த்தியிருந்தார். சொல்லேர் உழவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்த இந்நூலின் முதற்பிரதியை ஊடகவியலாளர் வி. தனபாலசிங்கம் வழங்கிவைக்க மூத்த எழுத்தாளுமை அன்னலட்சுமி இராஜதுரை பெற்றுக்கொண்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை செல்வன் ம. தர்மயா இசைக்க, புகழ்பெற்ற கணித ஆசிரியரும் பொ. ஐங்கரநேசனின் பள்ளிக்கால தோழரும் பல்துறைக் கலைஞருமான கலாபூஷணம் வி.ரி.ராஜேந்திரா வரவேற்புரை ஆற்றியிருந்தார். அரங்கு நிறைந்த இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்ற இவ்விழாவின் இறுதியில் நூலாசிரியரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் ஏற்புரையாற்றினார்.
எழுத்தாளரும் தமிழ்ச் தேசியி அரசியல் செயற்பாட்டாளரும் கல்வியாளருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள் தற்போதை எமது தமிழர் தாயகப் பரப்பில் அதிகளவு ஏமாற்றுப் பேர்வழிகள் அரசியல் தலைவர்கள் என்ற போலி முகங்களோடு பவனி வந்நதவண்ணம் மீண்டும் மக்களை ஏமாற்றத் தயாராகி வரும் காலத்தில் 24 மணி நேரமும் இயங்கும் ‘மக்கள் செயற்பாட்டாளர்’ என்பது இங்கு குறிப்பிடத்தக்கது















