LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள ‘செயற்கை நுண்ணறிவு இலவசப் பயிற்சி’ அமர்விற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Share

புதிய உலகளாவிய தொழில்நுட்பப் புரட்சிக்கேற்ப இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் நோக்குடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அமர்வொன்றை எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்த உள்ளது. இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

டிஜிட்டல் யுகத்தின் புதிய ஆயுதமான செயற்கை நுண்ணறிவை ( Artificial Inteligence – AI) கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அன்றாட வாழ்வில் எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவது என்பது பற்றிய பயிற்சி அமர்வு ஒன்றை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் திகதி (சனிக்கிழமை) நடாத்த உள்ளது.

இப் பயிற்சி அமர்வு வயாவிளான் குட்டியப்புலத்தில் பிள்ளையான் காடு வீதியில் அமைந்துள்ள கரிசல் பூங்காவில் காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது. எதிர்கால வேலைச் சந்தையில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் மற்றும் அதன் புதிய பயன்பாடுகள் குறித்து துறைசார் வல்லுநர்களால் விரிவாகக் கற்றுத்தரப்படவுள்ள இப் பயிற்சியில் க.பொ.த உயர்தரம் பூர்த்தி செய்த மற்றும் இளம் தொழில்முனைவோர் கலந்துகொள்ளலாம்.

பங்குபெற விரும்புபவர்கள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்பாக தங்களின் முழுப்பெயர், வயது மற்றும் முகவரியை 0741471759 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு வாட்ஸ் அப் (What’s App) மூலம் தெரிவித்து விண்ணப்பித்தல் வேண்டும். இவர்களில் இருந்து பொருத்தமான 100பேர் தெரிவுசெய்யப்பட்டுப் பயிற்சியில கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தெரிவுசெய்யப்படுபவர்கள் பயிற்சியின்போது மடிக்கணனி அல்லது திறன் கைத்தொலைபேசி ஒன்றை எடுத்து வருதல் கட்டாயமானதாகும். பயிற்சி அமர்வின் இறுதியில் கலந்துகொண்டவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். மேலதிக விபரங்களை 0777969644 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.